இங்கிலாந்தில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்களின் பெற்றோர் உட்பட பிற குடும்ப உறுப்பினர்களை தங்களுடன் தங்க வைப்பது அனுமதிக்கப்படாது என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
இங்கிலாந்தில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நாடு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அதில் முக்கிய அம்சமாக கல்வி கற்க வரும் மாணவர்கள் அவர்களுடன் பெற்றோர் உட்பட பிற குடும்ப உறுப்பினர்களை தங்களுடன் அழைத்து வருவதோ அல்லது வந்த பின் அவர்களை அழைத்து தங்க வைப்பதோ அனுமதிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது. எனினும் முதுநிலை ஆராய்ச்சி வட்டங்கள் மற்றும் அரசு நிதியுடன் பெறப்படும் பட்டங்கள் ஆகியவற்றை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் அனைத்து மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த மாதத்தில் இருந்தே புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் என்று இங்கிலாந்து அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர் கூறுகையில் இன்றிலிருந்து இங்கிலாந்தில் கல்வி பயலும் வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வருவது முடியாது என்றார். 2019 இல் இருந்து இங்கிலாந்துக்கு வரும் மாணவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வருவது 930 சதவீதம் அதிகரிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த புதிய விதிமுறைகள் மூலம் சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் இங்கிலாந்து வருவது குறையும் என்று இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.