அடுக்குமாடி வீடுகளில் பொது மின் கட்டணத்தை குறைக்கத் திட்டம்

September 13, 2023

கடந்த ஜூலை மாதத்தில் மின் கட்டணத்தை மின்வாரியம் உயர்த்தியது. இதனை தொடர்ந்து பொது பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது சேவை மின் இணைப்பு என லிஃப்ட், மோட்டார், போன்றவை இருந்து வருகிறது. இதற்கு வீட்டு பிரிவு கட்டணமும், பொது கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகின்றது. கடந்த 2022 ல் வீடு, அடுக்குமாடி குடியிருப்பு, தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கான மின் கட்டணத்தை உயர்த்தியது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் மீண்டும் […]

கடந்த ஜூலை மாதத்தில் மின் கட்டணத்தை மின்வாரியம் உயர்த்தியது. இதனை தொடர்ந்து பொது பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது சேவை மின் இணைப்பு என லிஃப்ட், மோட்டார், போன்றவை இருந்து வருகிறது. இதற்கு வீட்டு பிரிவு கட்டணமும், பொது கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகின்றது. கடந்த 2022 ல் வீடு, அடுக்குமாடி குடியிருப்பு, தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கான மின் கட்டணத்தை உயர்த்தியது.
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தி அறிவிப்பு வெளியாகியது. இதில் யூனிட் ஒன்றுக்கு ரூபாய் 8.5 எனவும் நிரந்தர கட்டணமாக ரூபாய் 102 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து பொது பயன்பாட்டு கட்டணத்தை குறைக்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu