சென்னை மற்றும் ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் இடையே புதிய கடல் வழி தடம்

July 10, 2024

சென்னையில் இருந்து ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகருக்கு புதிய கடல் வழி தடம் அமைக்க உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். ரஷ்யாவில் வசிக்கும் இந்தியர்களை சந்தித்த நரேந்திர மோடி, அவர்களிடையே உரையாற்றும்போது, புதிய கடல் வழி தடம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். அவர், “தற்போதைய நிலையில், ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் துறைமுகத்தில் இருந்து மும்பை துறைமுகத்துக்கு நிலக்கரி ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கு அதிக எரிபொருள் செலவாகிறது. எனவே, நிலக்கரி ஏற்றுமதி அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்த […]

சென்னையில் இருந்து ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகருக்கு புதிய கடல் வழி தடம் அமைக்க உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

ரஷ்யாவில் வசிக்கும் இந்தியர்களை சந்தித்த நரேந்திர மோடி, அவர்களிடையே உரையாற்றும்போது, புதிய கடல் வழி தடம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். அவர், “தற்போதைய நிலையில், ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் துறைமுகத்தில் இருந்து மும்பை துறைமுகத்துக்கு நிலக்கரி ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கு அதிக எரிபொருள் செலவாகிறது. எனவே, நிலக்கரி ஏற்றுமதி அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்காக, சென்னையில் இருந்து ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகருக்கு புதிய கடல் வழி தடம் அமைக்கப்பட உள்ளது. அதன்படி, கிட்டத்தட்ட 45 நாட்கள் ஆகும் மும்பை - பீட்டர்ஸ்பர்க் மார்க்கத்துக்கு பதிலாக, 15 முதல் 20 நாட்கள் மட்டுமே ஆகும் சென்னை - விளாடிவோஸ்டோக் மார்க்கம் பின்பற்றப்படும். இதன் மூலம், சரக்கு போக்குவரத்து எளிமையாகி இருதரப்பு வர்த்தகம் மேம்படும்” என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu