விண்வெளி நிகழ்வினை ஆய்வு செய்ய இஸ்ரோவின் அடுத்த விண்கலம்

September 4, 2023

நிலவினை ஆய்வு செய்ய விண்கலங்களை அனுப்பி வந்த இஸ்ரோ அடுத்ததாக விண்வெளி நிகழ்வுகளை ஆராய்ச்சி செய்ய இருக்கின்றது. இஸ்ரோ பூமியின் துணைக்கோளான நிலவின் தன்மையினை ஆய்வு செய்வதற்கு சந்திராயன் விண்கலங்களை வெற்றிகரமாக அனுப்பியுள்ளது. இதில் நிலவின் கந்தகம்,அலுமினியம், சிலிகான், கால்சியம், இரும்பு போன்ற மூலக்கூறுகள் இருப்பதை உறுதி செய்துள்ளது. இதைப் போன்று மங்கல்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் தன்மைகளை ஆராய செலுத்தப்பட்டது. அதுவும் வெற்றிகரமாக ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் தற்போது ஆதித்யா எல் -1 […]

நிலவினை ஆய்வு செய்ய விண்கலங்களை அனுப்பி வந்த இஸ்ரோ அடுத்ததாக விண்வெளி நிகழ்வுகளை ஆராய்ச்சி செய்ய இருக்கின்றது.

இஸ்ரோ பூமியின் துணைக்கோளான நிலவின் தன்மையினை ஆய்வு செய்வதற்கு சந்திராயன் விண்கலங்களை வெற்றிகரமாக அனுப்பியுள்ளது. இதில் நிலவின் கந்தகம்,அலுமினியம், சிலிகான், கால்சியம், இரும்பு போன்ற மூலக்கூறுகள் இருப்பதை உறுதி செய்துள்ளது. இதைப் போன்று மங்கல்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் தன்மைகளை ஆராய செலுத்தப்பட்டது. அதுவும் வெற்றிகரமாக ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் தற்போது ஆதித்யா எல் -1 என்ற விண்கலம் சூரியனை பற்றி ஆய்வு செய்ய விண்ணில் செலுத்தியுள்ளது. இந்நிலையில் வானியல் நிகழ்வுகளை மேலும் ஆழமாக புரிந்து கொள்ள "எக்சொபோட்" என்ற விண்கலம் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதில் போலிக்ஸ், எக்ஸ்பெக்ட் ஆகிய இரண்டு ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். இது ஐந்து ஆண்டுகள் விண்ணில் ஆய்வுகளில் ஈடுபடும். இந்த விண்கலம் விண்ணில் செலுத்துவதற்கு தயார் நிலையில் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu