சூரிய கரும்புள்ளி இரண்டாக வெடித்தது - சூரிய புயலுக்கான வாய்ப்புகள் குறித்து நாசா ஆய்வு

சூரியனிலிருந்த ஏஆர் 3234 கரும்புள்ளி காரணமாக, கடந்த மாதத்தில் பூமி அதிகப்படியான சூரிய புயல்களை எதிர்கொண்டது. இந்நிலையில், புதிதாக, ஏஆர் 3245 என்ற கரும்புள்ளி கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கரும்புள்ளி இரண்டாக வெடித்து, பிரிந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, பூமி மேலும் சில சக்தி வாய்ந்த சூரிய புயல்களை எதிர்கொள்ள நேரும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது தொடர்பாக நாசா ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள செய்தியில், “ஏஆர் 3245 சூரிய […]

சூரியனிலிருந்த ஏஆர் 3234 கரும்புள்ளி காரணமாக, கடந்த மாதத்தில் பூமி அதிகப்படியான சூரிய புயல்களை எதிர்கொண்டது. இந்நிலையில், புதிதாக, ஏஆர் 3245 என்ற கரும்புள்ளி கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கரும்புள்ளி இரண்டாக வெடித்து, பிரிந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, பூமி மேலும் சில சக்தி வாய்ந்த சூரிய புயல்களை எதிர்கொள்ள நேரும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது தொடர்பாக நாசா ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள செய்தியில், “ஏஆர் 3245 சூரிய கரும்புள்ளி, இரண்டாகப் பிரிந்துள்ளது. இந்த 2 புள்ளிகளுக்கும் இடையில் உள்ள இடைவெளி ‘லைட் பிரிட்ஜ்’ என்று அழைக்கப்படுகிறது. இது 20000 கிலோமீட்டர் நீளமுடையதாக உள்ளது. தற்போதைய நிலையில், இந்த சூரிய புள்ளியின் எதிர்கால நகர்வுகள் குறித்து கணிக்க இயலவில்லை” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், “பொதுவாக, இக்குநாக்ஸ் எனப்படும் மார்ச் 21ஆம் தேதி நெருங்கும் பொழுது, சூரிய புயல்கள் தாக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. எனவே, வரும் வாரங்களில், தீவிர சூரிய புயல்களை எதிர்கொள்ள நேரலாம்” என்று எச்சரித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu