ஏப்ரல் 1 முதல் புதிய வரி விதிப்பு அமல்

March 17, 2025

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய வரி விதிப்பு அமலுக்கு வருகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரிவிலக்கு வழங்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவித்திருந்தார். இந்த புதிய வரி விதிப்பு ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. பழைய மற்றும் புதிய வரிமுறைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்வது வரி செலுத்துவோரின் பொறுப்பு என்றாலும், புதிய வரிமுறையை ஊக்குவிக்க, பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் பழைய […]

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய வரி விதிப்பு அமலுக்கு வருகிறது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரிவிலக்கு வழங்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவித்திருந்தார். இந்த புதிய வரி விதிப்பு ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. பழைய மற்றும் புதிய வரிமுறைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்வது வரி செலுத்துவோரின் பொறுப்பு என்றாலும், புதிய வரிமுறையை ஊக்குவிக்க, பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய மற்றும் பழைய வரிமுறைகளின் கீழ் வரி செலுத்துவோர் வங்கி கணக்கு எண்ணை தெளிவாக குறிப்பிட வேண்டும். சேமிப்பு கணக்கில் கிடைக்கும் வட்டி, பங்குகள், கூட்டாண்மை சொத்துகள், வெளிநாட்டு சொத்துகள் உள்ளிட்ட வருமானங்களை தெரிவிக்க வேண்டும். பழைய வரிமுறையில் வீட்டு வாடகை, பயணப்படி, கல்விக்கடன், சுகாதாரக் காப்பீடு போன்ற கழிவுகளுக்கு விலக்கு கிடைக்கும். ஆனால் புதிய வரிமுறையில் குறைந்த வரி விகிதம் இருந்தாலும், பல விலக்குகள் கிடைக்காது. அதனால், வரி செலுத்துவோர் தங்களுக்கு ஏற்ற முறையை சரிவர மதிப்பீடு செய்து தேர்வு செய்ய வேண்டும்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu