வரும் 27ஆம் தேதி சென்னை விமான நிலைய புதிய முனையம் திறப்பு

March 15, 2023

சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன முனையத்தை வரும் 27ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். சென்னை விமான நிலையத்தில் 2,400 கோடி ரூபாய் மதிப்பில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டடம் நிறைவடைந்துள்ளது. இந்த முனையம் செயல்பாட்டுக்கு வந்ததும், பயணியரின் எண்ணிக்கை 2.2 கோடியில் இருந்து 3.5 கோடியாக அதிகரிக்கும். இந்நிலையில் புதிய விமான முனையத்தின் கட்டுமானப் பணிகள் முடிந்து விட்டன. பொருத்தப்பட்டுள்ள கருவிகள், […]

சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன முனையத்தை வரும் 27ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் 2,400 கோடி ரூபாய் மதிப்பில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டடம் நிறைவடைந்துள்ளது. இந்த முனையம் செயல்பாட்டுக்கு வந்ததும், பயணியரின் எண்ணிக்கை 2.2 கோடியில் இருந்து 3.5 கோடியாக அதிகரிக்கும். இந்நிலையில் புதிய விமான முனையத்தின் கட்டுமானப் பணிகள் முடிந்து விட்டன. பொருத்தப்பட்டுள்ள கருவிகள், உபகரணங்களில் சோதனைகள் நடந்து வருகின்றன. அடுத்த மாதம் திறக்கப்பட இருந்த நிலையில், பிரதமரின் அனுமதி முன்கூட்டியே கிடைத்திருப்பதால் வரும் 27ம் தேதி புதிய முனையத்தின் திறப்பு விழா நடக்கிறது.

டில்லியில் இருந்து 27ம் தேதி காலை ராமேஸ்வரம் வரும் பிரதமர், அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை முடித்து சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் நடக்கும் விழாவில் புதிய விமான முனையத்தை திறந்து வைக்கிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu