மெட்ரோ நிறுவனம் டிக்கெட் சலுகைகள் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயணிகள் மெட்ரோ டிக்கெட்டுகளை நேரடியாக, ஆன்லைன் மற்றும் கார்டு மூலம் ரீசார்ஜ் செய்து வாங்கலாம். இதற்கு முன், 20 மற்றும் அதற்கு மேற்பட்ட மெட்ரோ டிக்கெட்டுகளை காகித முறையில் வாங்கினால் 10% தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், 2025 மார்ச் 1 முதல் (1.3.2025) இந்த சலுகை திரும்பப் பெறப்படுமென மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது, டிஜிட்டல் முறையில் பயணிகளை ஊக்குவிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவாகும். இதற்கு மாற்றாக, CMRL மொபைல் ஆப் மூலம் QR முறையில் குரூப் டிக்கெட்டுகளை வாங்கினால் 20% தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.