நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊட்டி, கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் தமிழகம், இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோடை மாதங்களில், குறிப்பாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், வாகனங்கள் மலைச்சாலைகளில் பெரும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகின்றன. இதனால், சுற்றுலா பயணிகள் மற்றும் வாகனங்கள் குவியும் நாள்களில் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றன. இதற்காக, கடந்த ஆண்டு ஐகோர்ட்டின் உத்தரவின் படி, இ-பாஸ் முறையை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வருடம், ஐகோர்ட்டின் புதிய உத்தரவில், வார நாட்களில் 6,000 மற்றும் வார இறுதி நாட்களில் 8,000 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1 ஏப்ரல் முதல் புதிய கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.














