அமெரிக்காவில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்களுக்கு, விசா தொடர்பான புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது மாணவர்களில் நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தற்போது, மாணவர்கள் முழுநேர படிப்பில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் சேர்ந்திருந்தால், படிப்பு முடியும் வரை அமெரிக்காவில் தங்க அனுமதி உள்ளது. ஆனால் புதிய விதி அமலாக்கப்பட்டால், விசா நிர்ணயிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். இதனால், மாணவர்கள் அடிக்கடி விசா நீட்டிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டியதிருக்கும். இது அவர்கள் நேரத்தையும், செலவுகளையும் பெருக்கி, மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். டிரம்ப் நிர்வாகம் முன்வைத்த இந்த மாற்றம், கல்வி தேடிக்கொண்டு வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுத்தும் என்றும், அமெரிக்க உயர்கல்வி அமைப்புகள் மீது அதன் தாக்கம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.