9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் 9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில், நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 2வது அரையிறுதியில் மோதின. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் 129 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், 120 ரன்கள் மட்டுமே அடைந்து தோல்வியடைந்தது. இதன் மூலம், நியூசிலாந்து 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.