உலகிலேயே முதல் முறையாக, இளம் வயதினர் புகைப்பிடிப்பதற்கு நியூசிலாந்து தடை விதித்து, சட்டம் இயற்றியுள்ளது. அதன்படி, ஜனவரி 1 2009 க்கு பின்னர் பிறந்தவர்கள், புகைபிடிக்க தடை செய்யப்பட்டுள்ளார்கள். மேலும், புகையிலை பொருட்களை வாங்குவதற்கு அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு நியூசிலாந்து டாலர் மதிப்பில் 150000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகையிலை தடை சட்டம் 2009 ஆம் ஆண்டிற்கு பின் பிறந்த அனைவருக்கும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், புகைப் பழக்கம் இல்லாத எதிர்காலம் உருவாக்கப்படும் என்று அந்நாட்டின் துணை சுகாதார அமைச்சர் டாக்டர் ஆயிஷா வேரால் தெரிவித்துள்ளார். மேலும், புகைப்பழக்கத்தினால் ஏற்படும் எண்ணற்ற நோய்களுக்கான சிகிச்சை முறைகளுக்கு அவசியம் இல்லாமல் போகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அத்துடன், 2023 ஆம் ஆண்டின் இறுதியில், 6000 ஆக உள்ள சில்லறை புகையிலை விற்பனை உரிமம் 600 ஆக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.














