உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஆப்ரிக்கா விற்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது. அதில் நியூசிலாந்து அணி 75 சதவீதத்தில் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும், வங்காளதேசம் நான்காவது இடத்திலும் உள்ளன. அதேபோல் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகியவை ஐந்து முதல் ஒன்பது இடங்களில் உள்ளன.














