9-வது மகளிர் டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து வெற்றி

9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. துபாயிலும் சார்ஜாவிலும் நடைபெற்ற லீக் சுற்று மற்றும் அரையிறுதி முடிந்து, இன்று துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது. பின்னர் தென் ஆப்பிரிக்கா 159 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது.ஆனால் […]

9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

துபாயிலும் சார்ஜாவிலும் நடைபெற்ற லீக் சுற்று மற்றும் அரையிறுதி முடிந்து, இன்று துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது. பின்னர் தென் ஆப்பிரிக்கா 159 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது.ஆனால் தொடக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் மட்டும் 33 ரன்கள் அடித்து அணியிலிருந்து விரைவில் வெளியேறினர். அடுத்ததாக, முன்னணி வீராங்கனைகள் விரைவில் விக்கெட்டுகளை இழந்ததால், தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், நியூசிலாந்து 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu