உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 16வது லீக் ஆட்டம் நேற்று நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்றது.நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று விளையாடினார். இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்திருந்தது.இதனை அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். அதை தொடர்ந்து 34.4 ஓவர் முடிவில் 139 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் 149 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.