பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் பயணிக்க அரசு பஸ்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன, தற்போது புதிய அழகிய வடிவத்தில் பஸ்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தற்போது 20,508 பஸ்களை இயக்கி வருகின்றது. இதனை மேலும் மேம்படுத்தும் நோக்கத்தில், விழுப்புரம் மண்டலத்தில் புதிய வடிவமைப்பில் பஸ்கள் அறிமுகமாக உள்ளன. கருப்பு, சாம்பல், மஞ்சள், ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறங்களுடன், கண்ணை கவரும் வகையில் புதிய பஸ்கள் இயக்கம் தரப்பட உள்ளன. பி.எஸ்.6 வகை வசதியுடன் வரும் இவை, ஏ.சி. வசதியும் கொண்டதாக இருக்கும். இரண்டு பேர் நிம்மதியாக அமர இயலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பஸ்கள், தனியார் ஆம்னி பஸ்களுக்கு சவாலாக களமிறங்க இருக்கின்றன.