அண்மையில், புதிதாக 2 கிரகங்கள் சூரிய குடும்பத்திற்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது, அந்த 2 கிரகங்களும் நீரால் சூழப்பட்டவை என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து கருத்து தெரிவித்துள்ளனர்.
பூமியிலிருந்து 218 ஒளி ஆண்டுகள் தொலைவில் லைரா என்ற விண்வெளி கூட்டம் உள்ளது. அங்கு ஒரு சிறிய சிவப்பு நட்சத்திரத்தை சுற்றி இந்த இரு கிரகங்களும் வலம் வருகின்றன. இவற்றுக்கு கெப்லர் 138 சி மற்றும் கெப்லர் 138 டி என்று பெயரிடப்பட்டுள்ளது. ஹப்பிள் தொலைநோக்கியின் உதவியுடன் இவை கண்டறியப்பட்டது.
இந்நிலையில், வேற்று கிரகங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், இந்த கிரகங்கள் பூமியின் ஒன்றரை மடங்கு அளவைக் கொண்டவை என தெரிவித்துள்ளனர். மேலும், அதன் பாதி அளவுக்கு ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்களை விட கடினமாகவும், பாறைகளை விட நெகிழ்வாகவும் உள்ள பொருளால் ஆனவை என தெரிவித்துள்ளனர். எனவே, இந்த தன்மையுள்ள பொருள் நீராக இருக்க வேண்டும் என கருதப்படுகிறது.