ஆதித்ய பிர்லா ஃபேஷன் மற்றும் ரீடைல் நிறுவனத்தில், குமார் மங்கலம் பிர்லாவின் மகள் அனன்யா பிர்லா மற்றும் மகன் ஆரியமான் விக்ரம் பிர்லா ஆகியோர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். புதிய தலைமுறையின் வர்த்தக அணுகுமுறை மற்றும் சிந்தனைகளை பயன்படுத்திக் கொள்ள அவர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆதித்ய பிர்லா குழுமத்தின் வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்லும் உத்தியாக கருதப்படுகிறது.
அனன்யா மற்றும் ஆரியமான் பிர்லா ஆகியோர் தனிப்பட்ட முறையில் தொழில்துறையில் சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் வருகை மூலம் நிறுவனத்திற்கு புதிய உத்வேகம் கிடைக்கும் என்று ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார். ஆதித்ய பிர்லாவின் ஃபேஷன் மற்றும் ரீடைல் நிறுவனம், லூயி பிலிப்பி, ஆலன் சோலி, பீட்டர் இங்கிலாந்து ஆகிய நிறுவனங்களின் இந்திய வர்த்தகத்தை ஆக்கிரமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.