இயற்கை பேரிடர் மற்றும் தொழில்நுட்ப சிக்கலால், அகமதாபாத் தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேரும் NFAT 2025 நுழைவுத் தேர்வு, இன்று மற்றும் நாளை நடைபெற இருந்தது. ஆனால், சில மாநிலங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் மற்றும் எதிர்பாராத தொழில்நுட்ப சிக்கல்களால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தேர்வாளர்களின் சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.