தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் இடம்பெறலாம் - தேசியப் பங்குச் சந்தைக்கு செபி ஒப்புதல்

February 24, 2023

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் லாப நோக்கமற்ற சமூக சேவை நிறுவனங்கள் ஆகியவற்றை, தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிட செபி ஒப்புதல் வழங்கி உள்ளது. முன்னதாக, கடந்த 2020 ஆம் ஆண்டு பட்ஜெட் அறிக்கையில் இதற்கான அறிவிப்பு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து, தனிக்குழு மூலம், இந்த நிறுவனங்களை பட்டியலிடுவதற்கான சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், வகுக்கப்பட்ட விதிமுறைகள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் படி, தேசிய பங்குச் சந்தையில், 'சமூக பங்கு பரிவர்த்தனை' என்று தனி பிரிவு அறிமுகம் […]

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் லாப நோக்கமற்ற சமூக சேவை நிறுவனங்கள் ஆகியவற்றை, தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிட செபி ஒப்புதல் வழங்கி உள்ளது. முன்னதாக, கடந்த 2020 ஆம் ஆண்டு பட்ஜெட் அறிக்கையில் இதற்கான அறிவிப்பு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து, தனிக்குழு மூலம், இந்த நிறுவனங்களை பட்டியலிடுவதற்கான சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், வகுக்கப்பட்ட விதிமுறைகள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் படி, தேசிய பங்குச் சந்தையில், 'சமூக பங்கு பரிவர்த்தனை' என்று தனி பிரிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் கீழ், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் லாப நோக்கமற்ற நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தொண்டு நிறுவனங்களை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதன் மூலம், அந்த நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் பணி எளிமையாக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனவே, இது தொடர்பாக, தொண்டு நிறுவனங்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தேசிய பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ்குமார் சவுகான் தெரிவித்துள்ளார். மேலும், "செபியின் வரைமுறைக்கு உட்பட்ட சமூக சேவை நிறுவனங்கள் மட்டுமே பட்டியலில் இடம்பெற முடியும். கார்ப்பரேட் நிறுவனங்களின் அறக்கட்டளைகள், அரசியல் மற்றும் மத நிறுவனங்கள், உள்கட்டமைப்பு நிறுவனங்கள் ஆகியவை பட்டியலில் இடம்பெற முடியாது" என்று விளக்கம் அளித்துள்ளார்.

1
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu