தமிழகத்தின் சென்னை, கோவை, தென்காசி மாவட்டங்களில் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது. சென்னையில் மூன்று இடங்களிலும், தென்காசியில் ஒரு இடத்திலும், கோவையில் 20-க்கும் மேற்பட்ட இடத்திலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.கோவையில் நடைபெற்ற கார் வெடிகுண்டு சம்பவத்தில் உயிரிழந்த முக்கிய குற்றவாளி படித்து வந்த கல்லூரியில் தீவிரவாத செயலுக்கான பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல் வந்ததாகவும், அந்த கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் அதில் தொடர்புடைய 30 பேர் வீடுகளில் சோதனை நடத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.