பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு நாட்டில் மத மோதலை ஏற்படுத்தி தீவிரவாதத்தில் ஈடுபடுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் என். ஐ. ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் தற்போது ஐந்து மாநிலங்களில் திடீரென ஒரே நேரத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி பிஎப் ஐ அமைப்புக்கு சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த அமைப்புடன் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் என். ஐ. ஏ. அமைப்பு சோதனை நடத்தி வருகிறது. இதில் கேரளாவில் நடத்திய சோதனையில் பிஎப் ஐ அமைப்பின் ஆயுத பயிற்சி மையங்களில் ஒன்றாக இது செயல்பட்டு வந்த கிரீன் அகாடெமி - யை என். ஐ. ஏ. அதிகாரிகள் முடக்கினர். இது கேரளாவில் முடக்கப்பட்ட ஆறாவது ஆயுத பயிற்சி மையமாகும். இதனை தொடர்ந்து நேற்று கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் பீகார் ஐந்து மாநிலங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகிகளுக்கு சொந்தமான 14 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.