ஆப்பிரிக்க யூனியனில் இருந்து நைஜர் நாடு விலக்கி வைப்பு

August 23, 2023

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில், கடந்த ஜூலை 26 ஆம் தேதி, ராணுவ புரட்சி ஏற்பட்டது. அதன்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர் நீக்கப்பட்டு, ராணுவ ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, நைஜரில் மீண்டும் ஜனநாயக ஆட்சி அமையும் வரை, நைஜரை ஆப்பிரிக்க யூனியனிலிருந்து விலக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நைஜரில் நடைபெற்ற ராணுவ புரட்சியை அங்கீகரிக்கும் எந்தவித நடவடிக்கையிலும் ஆப்பிரிக்க யூனியன் நாடுகள் ஈடுபடக் கூடாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. நைஜரில் நிகழ்த்தப்பட்ட ராணுவப் புரட்சி மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பு […]

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில், கடந்த ஜூலை 26 ஆம் தேதி, ராணுவ புரட்சி ஏற்பட்டது. அதன்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர் நீக்கப்பட்டு, ராணுவ ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, நைஜரில் மீண்டும் ஜனநாயக ஆட்சி அமையும் வரை, நைஜரை ஆப்பிரிக்க யூனியனிலிருந்து விலக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நைஜரில் நடைபெற்ற ராணுவ புரட்சியை அங்கீகரிக்கும் எந்தவித நடவடிக்கையிலும் ஆப்பிரிக்க யூனியன் நாடுகள் ஈடுபடக் கூடாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நைஜரில் நிகழ்த்தப்பட்ட ராணுவப் புரட்சி மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பு சட்டவிரோதமாக கருதப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு, நைஜர் நாட்டில் முதல் முறையாக, அமைதியான முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர் பொறுப்பேற்று இருந்தார். இந்த நிலையில், அதிபர் முகமது பாஸும் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, ராணுவ தளபதி அப்துர் ரஹ்மான் சியானி தற்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ளார். ஆனால், இவர் நடத்திய ராணுவப் புரட்சிக்கு, ஐ நா, ஐரோப்பிய ஒன்றியம், ஆப்பிரிக்க ஒன்றியம் போன்ற அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu