காஷ்மீர் சர்வதேச எல்லையில் 2 மாதத்திற்கு இரவு ஊரடங்கு

January 4, 2023

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சம்பா சர்வதேச எல்லை பகுதியில் 2 மாதத்திற்கு இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது. காஷ்மீரில் சமீபகாலமாக குறிப்பிட்ட சமூகத்தினரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பொதுமக்கள் மீதான துப்பாக்கி சூடு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, ஜம்மு பிராந்தியத்தில் பல ஆண்டாக அமைதி நிலவி வரும் நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எல்லை பகுதிகளில் […]

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சம்பா சர்வதேச எல்லை பகுதியில் 2 மாதத்திற்கு இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.

காஷ்மீரில் சமீபகாலமாக குறிப்பிட்ட சமூகத்தினரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பொதுமக்கள் மீதான துப்பாக்கி சூடு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, ஜம்மு பிராந்தியத்தில் பல ஆண்டாக அமைதி நிலவி வரும் நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

எல்லை பகுதிகளில் நடைபெறும் பயங்கரவாத செயல்களை தடுப்பதற்கான தீவிர முயற்சியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் எல்லை பாதுகாப்பு படைவீரர்களின் கோரிக்கையை ஏற்று ஜம்மு காஷ்மீரில் உள்ள சம்பா மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu