சென்னை எழும்பூர் விழுப்புரம் தாம்பரம் யார்டு பகுதியில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை தாம்பரம் இடையே இரவு நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று முதல் 16ஆம் தேதி வரையிலும், 18ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதைப்போன்று தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு இரவு புறப்படும் மின்சார ரயில்களும் இன்று முதல் 16ஆம் தேதி வரையிலும், 18ம் தேதி முதல் 23ஆம் தேதி வரையிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.