குடியரசு கட்சி வேட்பாளர் நிக்கி ஹேலி நவாடா மாகாணத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியில் தோல்வியுற்றார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக குடியரசு கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுக்க அந்நாட்டின் நவாடா மாகாணத்தில் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹேலி தோல்வி அடைந்தார். அந்த வாக்கெடுப்பின்போது எந்த வேட்பாளருக்கும் ஆதரவில்லை என்று பெரும்பான்மையான வாக்காளர்கள் தெரிவித்தனர். அதில் பங்கேற்ற ஒரே முக்கிய வேட்பாளர் நிக்கி ஹேலி. அவர் இந்த தோல்வி மூலம் அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் பின்னடைவை சந்தித்துள்ளார் என்று கூறப்படுகிறது.