தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் 200 இடங்களில் ‘நிலா திருவிழா’ நடத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெ.மனோகர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை, மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார், அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி, பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆஸ்ட்ரோபிசிக்ஸ், அஸ்ட்ரோனாமிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா, பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து ‘நிலா திருவிழா 200’ என்ற நிகழ்வு கோவையில் 40 இடங்கள், சென்னையில் 30 இடங்கள், திருச்சியில் 25 இடங்கள் உட்பட மாநிலம் முழுவதும் 200 இடங்களில் நடத்தப்பட உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.