அக்டோபர் 21 முதல் 25 வரை மொத்தம் 9 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் புதிதாக அறிமுகமாக உள்ளன. அதாவது ஐபிஓ வெளியிடுகின்றன. இந்த 9 நிறுவனங்களின் மொத்த மதிப்பு ரூ.10,985 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
சூரிய சக்தி துறையில் முன்னணி நிறுவனமான Waaree Energies, ரூ.4,321 கோடி மதிப்பில் பங்குச்சந்தையில் அறிமுகமாகிறது. ஒரு பங்கின் விலை ரூ.1,427 முதல் ரூ.1,503 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமான துறையில் செயல்படும் தீபக் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் நிறுவனம், ரூ.260 கோடி மதிப்பில் பங்குச்சந்தைக்கு வருகிறது. ஒரு பங்கின் விலை ரூ.192 முதல் ரூ.203 வரை இருக்கும். பயோடீசல் உற்பத்தி செய்யும் கோதாவரி பயோரிஃபைனரிஸ் நிறுவனம், ரூ.555 கோடி மதிப்பில் பங்குச்சந்தையில் அறிமுகமாகிறது. ஒரு பங்கின் விலை ரூ.334 முதல் ரூ.352 வரை இருக்கும். கட்டுமானத் துறை நிறுவனமான Afcons Infrastructure, ரூ.5,430 கோடி மதிப்பில் பங்குச்சந்தையில் அறிமுகமாகிறது. இதனுடன், பிரீமியம் பிளாஸ்ட், டேனிஷ் பவர், யுனைடெட் ஹீட் டிரான்ஸ்ஃபர், OBSC பெர்ஃபெக்ஷன் மற்றும் உஷா ஃபைனான்சியல் சர்வீசஸ் போன்ற பிற நிறுவனங்களும் SME பிரிவில் பங்குச்சந்தைக்கு வருகின்றன. மேலும், இந்த வாரத்தில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா, லக்ஷ்யா பவர்டெக் மற்றும் Freshara அக்ரோ எக்ஸ்போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.














