ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி ஆகிய நிறுவனங்கள் விரைவில் இணைக்கப்பட உள்ளன. இந்த இணைப்பில் உருவாகும் நிறுவனத்தின் தலைவராக முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், போதி ட்ரீ நிறுவனத்தை சேர்ந்த உயர் அதிகாரி உதய் சங்கர் துணைவேந்தராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி நிறுவனங்களின் இணைப்பில் உருவாகும் புதிய நிறுவனத்தில், டிஸ்னி நிறுவனம் 40% பங்குகளை கொண்டிருக்கும். ரிலையன்ஸ் குழுமம் 51% பங்குகளை கொண்டிருக்கும், மீதமுள்ள 9% பங்குகளை போதி ட்ரீயின் உதய் சங்கர் கொண்டிருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த இணைப்பு நடவடிக்கையின் முக்கிய ஆவணங்கள் கையெழுத்தாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.














