வரும் 27-ல் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம் நடைபெறுகிறது.
அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்கள் நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். பிரதமர், நிதி ஆயோக்கின் தலைவர் ஆவார். கடந்த ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் ஆகஸ்ட் 7-ம் தேதி இக்கூட்டம் நடைபெற்றது. கரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ல் இக்கூட்டம் நடைபெறவில்லை.
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் வரும் 27-ம் தேதி, நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பொருளாதாரம், விவசாயம் மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.