ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏக்கள் மற்றும் பாட்னாவில் பாஜக கட்சி எம்.எல்.ஏக்களும் நிதீஷ் குமாரை ஆதரித்துள்ளனர்.
ஆளும் பாஜகவை தோற்கடிப்பதற்காக பீகார் முதல் மந்திரி மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் 27 எதிர் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியை உருவாக்கினார். இதில் ஆரம்பத்தில் இருந்து சுமூகமான சூழ்நிலை ஏற்படவில்லை. மேலும் பீஹாரில் காங்கிரஸ் உடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகளிலும் திருப்தி ஏற்படவில்லை. அதனைத் தொடர்ந்து பாட்னாவில் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அக்கூட்டத்தில் நிதிஷ்குமாரை ஆதரிப்பதாக ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏக்கள் மற்றும் பாட்னாவில் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏக்கள் 78 பேரும் நிதீஷ் குமார் முதல் மந்திரியாக ஆதரிப்பதாக எழுத்துப்பூர்வமாக தனித்தனி கடிதங்களில் எழுதி கையெழுத்திட்டு கொடுத்தனர். அதனை தொடர்ந்து நிதீஷ் குமார் ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநரை சந்தித்து முதல் மந்திரியாக பதவி ஏற்பதற்காக அனுமதி கோரினார். பின்னர் ஒன்பதாவது முறையாக நிதிஷ்குமார் பீஹார் மாநிலத்தில் முதல் மந்திரி ஆக பதவியேற்றுள்ளார்.














