கன்னியாகுமரி - நிஜாமுதீன், நிஜாமுதீன் - கன்னியாகுமரி செல்லும் ரயில்களின் சேவை விஜயவாடாவில் நடைபெறும் பராமரிப்பு காரணமாக மாற்றப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து டெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கு இரவு 7:10 மணிக்கு புறப்பட்ட செல்லும் அதிவிரைவு ரயில் மதுரை, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர், வண்ணாரப்பேட்டை,பெரம்பூர், அரக்கோணம், ரேணிகுண்டா, கச்சிகுடா, காசிப்பட்டி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த ரயில் விஜயவாடா அக்டோபர் 4 மற்றும் 6-ம் தேதிகளில் செல்லாது.அதேபோல் ஹஸ்ரத் நிஜாமுதீனில் இருந்து கன்னியாகுமரிக்கு காலை 5.20 மணிக்கு புறப்படும் ரயில் பல்ஹர்ஷா, காசிப்பேட்டை, கச்சிக்குடா, ரேணிகுண்டா, அரக்கோணம், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை, எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மதுரை வழியாக அக்டோபர் 2 மற்றும் 9ஆம் தேதிகளில் திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த ரயிலும் விஜயவாடா செல்லாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.














