பிளிப்கார்ட் நிறுவனத்தில் பணியாற்றி வரும் மூத்த அதிகாரிகள் மற்றும் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு, வருடாந்திர ஊதிய உயர்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உயர் பதவியில் உள்ள 30% ஊழியர்கள் பாதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் பதவியில் அல்லாத, கிரேட் 9 க்கும் கீழான நிலையில் பணியாற்றும் 70% ஊழியர்களுக்கு மட்டுமே இந்த வருடத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி கிருஷ்ண ராகவன் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய முறையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், பிளிப்கார்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வால்மார்ட், பிளிப்கார்ட் நிறுவனம் நல்ல முறையில் முன்னேறி வருவதாக தெரிவித்துள்ளது.