தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கக்கூடிய மின்கட்டணத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாகவும், கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் பல்வேறு கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கக்கூடிய மின்கட்டணத்தில் எந்தவொரு மாற்றமும் இருக்காது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் நுகர்வோர் விலை குறியீடு உயர்வின் அடிப்படையில் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருப்பதால் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக கூறப்பட்டது. தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கக்கூடிய மின்கட்டணத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.














