ஆசிரியர் பணி நியமனத்தில் சமரசம் கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

October 13, 2022

ஆசிரியர் பணி நியமனத்தில் சமரசம் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளியில், இந்தி முதுகலை பட்டதாரி ஆசிரியராக ஹீரா காதூன் என்பவரின் நியமனத்துக்கு அரசு ஒப்புதல் அளிக்க மறுத்தது. இதை எதிர்த்து ஹீரா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அலகாபாத்தில் உள்ள இந்தி சாஹித்ய சம்மேளன் பிரயாக்கில் மனுதாரர் பெற்ற சிக்‌ஷா விஷாரத் பட்டம், தமிழகத்தில் பி.எட். படிப்புக்கு இணையாக கருத […]

ஆசிரியர் பணி நியமனத்தில் சமரசம் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளியில், இந்தி முதுகலை பட்டதாரி ஆசிரியராக ஹீரா காதூன் என்பவரின் நியமனத்துக்கு அரசு ஒப்புதல் அளிக்க மறுத்தது. இதை எதிர்த்து ஹீரா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அலகாபாத்தில் உள்ள இந்தி சாஹித்ய சம்மேளன் பிரயாக்கில் மனுதாரர் பெற்ற சிக்‌ஷா விஷாரத் பட்டம், தமிழகத்தில் பி.எட். படிப்புக்கு இணையாக கருத முடியாது எனக் கூறி, நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்த உத்தரவை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ஆசிரியர் பணி நியமனங்களின் போது, கல்வித்தகுதியில் எந்த சூழலிலும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது எனத் தெரிவித்த நீதிபதி, உரிய கல்வித்தகுதியைப் பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu