அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் அனைத்தும், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு பொருந்தாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலர் முருகானந்தம் கூறுகையில், அரசு ஊழியர்கள் சலுகை தொடர்பான அரசாணைகள் அனைத்தும், பொதுத் துறை நிறுவனம் மற்றும் பொதுத் துறை வாரியங்களுக்கு பொருந்தாது. ஊதிய மாற்றம், பணி சலுகை போன்ற சலுகைகளை பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு அமல்படுத்தக் கூடாது. அதற்கு, அரசு ஒப்புதல் பெற வேண்டும் என்றார்.
அரசு சலுகைகள் அனைத்தையும் நிதித் துறை ஒப்புதல் பெறாமல் அமல்படுத்துவதால் நிதிச்சுமை கூடுதலாகிறது. இது தற்போது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. நிறுவனங்கள் தனித்து செயல்படுபவை. எனவே, அவை நிதி நிலையை பொறுத்து முடிவெடுக்க வேண்டும். இது தொடர்பாக, ஏற்கனவே சில வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அவற்றை பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.