சட்டசபையில் அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
சட்டசபையில் அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. துணை சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அவையில், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் தீர்மானத்தை முன்மொழிந்தார், எஸ்.பி. வேலுமணி வழிமொழிந்தார்.
முதலில் குரல் வாக்கெடுப்பு நடந்தது, அதில் தீர்மானம் தோல்வியடைந்தது. தொடர்ந்து டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 63 பேர் ஆதரவாக, 154 பேர் எதிராக வாக்களித்ததால் தீர்மானம் தோல்வியடைந்தது.நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததையடுத்து சபாநாயகர் அப்பாவு மீண்டும் தனது இருக்கையில் அமர, சட்டசபை உறுப்பினர்கள் கைதட்டி வரவேற்றனர்.