ஹெல்மெட் இல்லையெனில் பெட்ரோல் இல்லை – திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய நடவடிக்கை

ஏப்ரல் 1 முதல் ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் வழங்க முடியாது என்ற திட்டத்தை போலீசார் அமல்படுத்த உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன விபத்துகள் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான விபத்துகளில் ஹெல்மெட் அணியாமை உயிரிழப்புக்கு காரணமாகிறது. இதை தடுக்கும் வகையில், திருவள்ளூர் போலீசார் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். அதன்படி, ஏப்ரல் 1 முதல் ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் வழங்க முடியாது என்ற திட்டத்தை போலீசார் அமல்படுத்த உள்ளனர். பெட்ரோல் பங்குகளில் “நோ ஹெல்மெட், […]

ஏப்ரல் 1 முதல் ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் வழங்க முடியாது என்ற திட்டத்தை போலீசார் அமல்படுத்த உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன விபத்துகள் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான விபத்துகளில் ஹெல்மெட் அணியாமை உயிரிழப்புக்கு காரணமாகிறது. இதை தடுக்கும் வகையில், திருவள்ளூர் போலீசார் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். அதன்படி, ஏப்ரல் 1 முதல் ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் வழங்க முடியாது என்ற திட்டத்தை போலீசார் அமல்படுத்த உள்ளனர். பெட்ரோல் பங்குகளில் “நோ ஹெல்மெட், நோ பெட்ரோல்” என்ற அறிவிப்புகள் ஒட்டப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள், "விபத்துகளை குறைக்க இந்த திட்டம் ஏப்ரல் 1 முதல் கடுமையாக செயல்படுத்தப்படும்" என்று தெரிவித்தார். முதற்கட்டமாக, திருவள்ளூர் நகரில் அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு, பிற பகுதிகளிலும் விரைவில் செயல்படுத்தப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu