எவ்வளவு காலம் ஆனாலும் உக்ரைனுக்கு துணையாக நிற்போம் - அமெரிக்கா 

April 12, 2023

ரஷியாவுக்கு எதிரான போரில் எவ்வளவு காலம் ஆனாலும் உக்ரைனுக்கு துணையாக நிற்போம் என அமெரிக்கா அறிவித்து உள்ளது. உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து ஓராண்டுக்கும் மேலான நிலையில், போர் முடிவுக்கு வராமல் தொடர்ந்து, நீடித்து வருகிறது. பலரை பலி வாங்கிய இந்த போரில் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் செயல்பட்டு வருகின்றன. உக்ரைனுக்கு வேண்டிய நிதி, ஆயுத உதவிகளையும் செய்து வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன், உக்ரைனின் […]

ரஷியாவுக்கு எதிரான போரில் எவ்வளவு காலம் ஆனாலும் உக்ரைனுக்கு துணையாக நிற்போம் என அமெரிக்கா அறிவித்து உள்ளது.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து ஓராண்டுக்கும் மேலான நிலையில், போர் முடிவுக்கு வராமல் தொடர்ந்து, நீடித்து வருகிறது. பலரை பலி வாங்கிய இந்த போரில் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் செயல்பட்டு வருகின்றன. உக்ரைனுக்கு வேண்டிய நிதி, ஆயுத உதவிகளையும் செய்து வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன், உக்ரைனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபாவை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதுபற்றி அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஐரோப்பிய பகுதிகளில் அமைதியும், பாதுகாப்பும் நிலவ உக்ரைனின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது என பிளிங்கள் சுட்டி காட்டியுள்ளார். அதனால், போரில் எவ்வளவு காலம் ஆனாலும் உக்ரைனுக்கு துணையாக நிற்போம் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார். உக்ரைனின் பாதுகாப்பு சார்ந்த உதவிக்கான கூட்டணி நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் உறுதிமொழி உள்ளிட்டவை பற்றியும் விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu