ஆட்டோ கட்டணங்களை பயணிகளே ஓட்டுனருடன் தீர்மானிக்கலாம் - உபர் அதிரடி

February 20, 2025

உபர் நிறுவனம் இந்தியாவில் தனது ஆட்டோ ரிக்ஷா சேவையில் புதிய மாற்றம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. பிப்ரவரி 18 முதல், உபர் ஆட்டோ பயணங்களுக்கான கட்டணம் முழுவதும் ஓட்டுனருக்கு செல்லும் வகையில், எந்தவித கமிஷனும் நிறுவனம் வசூலிக்காது. மேலும், பயணிகள் ரொக்கமாக மட்டுமே பணம் செலுத்த முடியும். உபர் செயலியில் அருகிலுள்ள ஆட்டோக்களை கண்டறியலாம், ஆனால் சேவையின் பொறுப்பை நிறுவனம் ஏற்காது. ஓட்டுநர்களும் பயணிகளும் கட்டணத்தை நேரடியாக தீர்மானிக்க வேண்டும். பயணக் கட்டணம் தொடர்பான எந்த விதமான […]

உபர் நிறுவனம் இந்தியாவில் தனது ஆட்டோ ரிக்ஷா சேவையில் புதிய மாற்றம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. பிப்ரவரி 18 முதல், உபர் ஆட்டோ பயணங்களுக்கான கட்டணம் முழுவதும் ஓட்டுனருக்கு செல்லும் வகையில், எந்தவித கமிஷனும் நிறுவனம் வசூலிக்காது. மேலும், பயணிகள் ரொக்கமாக மட்டுமே பணம் செலுத்த முடியும். உபர் செயலியில் அருகிலுள்ள ஆட்டோக்களை கண்டறியலாம், ஆனால் சேவையின் பொறுப்பை நிறுவனம் ஏற்காது. ஓட்டுநர்களும் பயணிகளும் கட்டணத்தை நேரடியாக தீர்மானிக்க வேண்டும்.

பயணக் கட்டணம் தொடர்பான எந்த விதமான மோதல்களிலும் உபர் ஈடுபடாது. பயணிகள் முன்பதிவு செய்துவிட்டு ரத்து செய்தாலும், அதற்கான கட்டணம் வசூலிக்கப்படாது. டிஜிட்டல் கட்டண முறைகள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பயன்பாட்டில் இருக்காது. இருப்பினும், பயணிகள் ஓட்டுனரின் விருப்பத்திற்கேற்ப யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம். உபர் தனது செயலியின் மூலம் பயணிகள் மற்றும் ஓட்டுநர்களை இணைக்கும் ஒரு தளமாக மட்டுமே செயல்படும் என்றும், பாதுகாப்பு தொடர்பான தேவைகளை எதிர்காலத்தில் பரிசீலிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu