இந்தியாவில், கடந்த ஒரு மாத காலமாக, புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை என்று தகவல் வெளிவந்துள்ளது. Indian Sars-COV-2 Consortium on Genomics என்ற ஆய்வு நிறுவனம் இந்த தகவல்களை தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவைப் பொறுத்தவரை, எக்ஸ்பிபி (XBB) வகை கொரோனா வைரஸ் அதிகமாக காணப்படுவதாக தெரிவித்துள்ளது.
ஓமைக்ரான் கொரோனா வைரசின் உட்பிரிவுகளான (உருவத்திரிபுகள்) பிஏ 2.75 மற்றும் பிஏ 2 ஆகியவற்றின் இணைந்த வடிவமாக எக்ஸ்பிபி என்ற உருமாறிய கொரோனா அறியப்படுகிறது. தற்போது, பி 2.5 போன்ற முந்தைய உருமாறிய கொரோனா வைரஸ் வலுவிழந்த நிலையில், எக்ஸ்பிபி ரக கொரோனா தொற்று மட்டும் இந்தியாவில் காணப்படுவதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.