சென்னை பல்கலைக்கழகத்தில் பிபிசி ஆவணப்படத்தை திரையிட அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் முதல்வராக பிரதமர் மோடி இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரம் குறித்து 'இந்தியா: மோடி கேள்விகள்' என்ற ஓர் ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டிருந்தது. இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடைவிதித்துள்ளது. ஆனால் சில பகுதிகளில் தடையை மீறி வெளியிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை திரையிட அனுமதி இல்லை என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.