உக்ரைன் ரஷ்யா போர் 2 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ உறுப்பு நாடுகளின் படைகள் இனிமேல் அனுப்பப்படாது என கூறப்பட்டுள்ளது. நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பெர்க் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கிய காலத்தில் இருந்தே, உக்ரைனுக்கு நேட்டோ பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், நேட்டோ உறுப்பு நாடுகளில் இருந்து போர் படைகள் உக்ரைனுக்கு ஆதரவாக அனுப்பப்பட்டால், அந்தந்த நாடுகளுடன் ரஷ்யாவின் உறவு பாதிக்கும்; மேலும் மிகப்பெரிய போர் வெடிக்கும் என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதனை அடுத்து, நேட்டோ பொதுச் செயலர், உறுப்பு நாடுகளின் படைகள் உக்ரைனுக்கு ஆதரவாக அனுப்பப்படாது என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.














