துவரம் பருப்பு, உளுந்து பருப்பு ஆகிய பருப்புகளுக்கு எந்த வித இறக்குமதி கட்டுப்பாடும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
இறக்குமதிக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாத பொருட்கள் பிரிவில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த பொருள்களுக்கான இறக்குமதி அனுமதி 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் இவை மீண்டும் 2025 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கை உள்நாட்டு வரத்தை அதிகரிக்கவும், விலையை கட்டுப்பாட்டில் வைக்கவும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.