உக்ரைனுடன் உள்ள போரை முடிவுக்கு கொண்டு வருவது கடினம் என ரஷிய அதிபர் புதின் கூறினார்.
ரஷியாவில் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு 22-24-ந்தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தச் சூழலில், ரஷிய அதிபர் புதின் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "இந்திய பிரதமர் மோடி ரஷியா-உக்ரைன் போர் குறித்து மிகுந்த கவலை தெரிவித்தார். இதற்காக ரஷியா நன்றி கூறுகிறது. உக்ரைனுடன் உள்ள போரை முடிவுக்கு கொண்டு வருவது கடினம். ரஷியாவை போரில் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் தள்ளிவிட்டன. ரஷிய ராணுவம் உலகின் சிறந்த மற்றும் உயர் தொழில்நுட்பப் படைகளில் ஒன்றாக மாறியுள்ளது. பிரிக்ஸ் யாருக்கும் எதிரானது அல்ல; இதை மோடி சரியாகக் கூறியுள்ளார். ரஷியா, அமெரிக்கா இடையே ஏற்பட்ட விரிசலுக்கான காரணம் அமெரிக்கா" என்றார்.














