புதுச்சேரி கடற்கரை சாலையில் மதியம் 2 மணியிலிருந்து வாகனங்கள் செல்ல தடை

December 31, 2022

புதுச்சேரி கடற்கரை சாலையில் மதியம் 2 மணியிலிருந்து வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு புத்தாண்டை வரவேற்க புதுச்சேரி கோலாகலமாக தயாராகி வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிந்து வருகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மதியம் 2 மணியிலிருந்து […]

புதுச்சேரி கடற்கரை சாலையில் மதியம் 2 மணியிலிருந்து வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு புத்தாண்டை வரவேற்க புதுச்சேரி கோலாகலமாக தயாராகி வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிந்து வருகின்றனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மதியம் 2 மணியிலிருந்து புதுச்சேரி கடற்கரை சாலை அமைந்துள்ள ஒயிட் டவுண் பகுதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu