யுபிஐ பரிவர்த்தனை வசதிகளை கொண்ட நோக்கியா ஃபியூச்சர் போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா 110 4ஜி மற்றும் நோக்கியா 110 2ஜி என்ற இரு வேறு மாடல்கள் அறிமுகமாகியுள்ளன. மற்ற ஃப்யூச்சர் போன்களை காட்டிலும் இதில் யு பி ஐ பரிவர்த்தனை அம்சம் கூடுதலாக இடம்பெற்றுள்ளதால், பொதுமக்கள் இடையே அதிக கவனம் பெற்றுள்ளது. மேலும், இந்த கைபேசிகளின் விலை முறையே 2499 மற்றும் 1699 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த விலையில் யுபிஐ பரிவர்த்தனை சேவை கிடைப்பதால், இந்த கைபேசிகளின் விற்பனை இந்தியாவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியாவில் ஃப்யூச்சர் போன் பயன்படுத்தி வரும் லட்சக்கணக்கான மக்களை, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை நோக்கி இந்த கைபேசிகள் நகர்த்தும் என்று கூறப்படுகிறது. யுபிஐ பரிவர்த்தனை தவிர, இதில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள், 1450 எம்ஏஎச் பேட்டரி, இன்டர்நெட் வசதி, வயர்லெஸ் எஃப் எம், பில்ட் இன் ரியர் கேமரா ஆகியவை குறிப்பிடத்தக்கது.