60 வருடங்களுக்கு பிறகு புதிய லோகோ வெளியிட்ட நோக்கியா

February 27, 2023

நோக்கியா நிறுவனம், 60 வருடங்களுக்குப் பிறகு, நிறுவனத்திற்கான புதிய லோகோவை வெளியிட்டுள்ளது. தொலைத்தொடர்புத் துறையில் பல்வேறு பிரிவுகளில் நிறுவனத்தின் வளர்ச்சியை குறிக்கும் வண்ணம் இந்த லோகோ மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக, நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைப்பேசி துறையில் வளர்ச்சி குறைவாக காணப்பட்டாலும், வர்த்தக நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு சேவைகள் வழங்குவதில் நிறுவனம் முக்கியப் பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது. பார்சிலோனாவில், சர்வதேச கைப்பேசிகள் கண்காட்சி இன்று தொடங்கி, மார்ச் 2ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்வுக்கு முன்னதாக, நோக்கியா நிறுவனத்தின் […]

நோக்கியா நிறுவனம், 60 வருடங்களுக்குப் பிறகு, நிறுவனத்திற்கான புதிய லோகோவை வெளியிட்டுள்ளது. தொலைத்தொடர்புத் துறையில் பல்வேறு பிரிவுகளில் நிறுவனத்தின் வளர்ச்சியை குறிக்கும் வண்ணம் இந்த லோகோ மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக, நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைப்பேசி துறையில் வளர்ச்சி குறைவாக காணப்பட்டாலும், வர்த்தக நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு சேவைகள் வழங்குவதில் நிறுவனம் முக்கியப் பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

பார்சிலோனாவில், சர்வதேச கைப்பேசிகள் கண்காட்சி இன்று தொடங்கி, மார்ச் 2ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்வுக்கு முன்னதாக, நோக்கியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி பேக்கா லுன்டுமார்க், லோகோ மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நோக்கியா நிறுவனத்தின் புதிய லோகோவில், 5 வெவ்வேறு வடிவங்கள் இணைக்கப்பட்டு, NOKIA என்ற ஆங்கில வார்த்தை கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், நோக்கியாவின் பழைய லோகோவில் இருந்த நீல நேரம் நீக்கப்பட்டு, பல்வேறு வண்ணக் கலவைகள் இடம் பெற்றுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu