நிலவில் குடியிருப்புகளை அமைப்பதற்கு பல்வேறு உலக நாடுகள் திட்டமிட்டு வருகின்றன. அதன் நீட்சியாக, நிலவில் 4ஜி சேவைகளை ஏற்படுத்த நாசா மற்றும் நோக்கியா நிறுவனங்கள் இணைந்து பணியாற்றி வருகின்றன.
நிலவில் 4ஜி இணைப்புகளை ஏற்படுத்துவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் லேண்டர் கொண்டு செல்லப்படுகிறது. நிலவின் தென் துருவப் பகுதியில் இந்த லேண்டர் நிலைநிறுத்தப்படும். பூமியிலிருந்து இதன் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியும். ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் செலுத்தப்படுவதற்கான தேதிகள் இன்னும் முடிவாகவில்லை. ஆனால், நிலவில் 4ஜி கட்டமைப்புகளை செயல்படுத்துவதில் பல்வேறு சவால்கள் உள்ளன. தற்போதைய நிலையில், 4ஜி கட்டமைப்புகள் நோக்கியாவின் பெல் லேப்ஸ் வளாகத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது இன்டியூடிவ் மெஷின்ஸ் ராக்கெட்டில் கொண்டு செல்லப்படும். நாசாவின் ஆர்டெமிஸ் திட்டத்தில், வீரர்களுடன் தொலைத்தொடர்பு சேவைகளை ஏற்படுத்துவதற்கு இந்த கட்டமைப்புகள் மிக முக்கியமான அங்கம் வகிக்கும்.