வளர்ச்சிக் கணிப்பை விட உயர்ந்த நோக்கியாவின் காலாண்டு லாபம்

January 26, 2023

கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், நோக்கியா நிறுவனத்தின் லாபம் நிறுவனத்தின் வளர்ச்சி கணிப்பை விட உயர்வாக பதிவாகியுள்ளது. மேலும், இந்தியா போன்ற நாடுகளில் 5ஜி தொழில்நுட்பம் காலூன்ற தொடங்கி உள்ளதால், 2023 ஆம் ஆண்டிலும் லாபம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில், நிறுவனத்தின் லாபம் 924.6 மில்லியன் யூரோக்களாக பதிவாகி இருந்தது. மேலும், 2022 ஆம் ஆண்டில், ஒட்டுமொத்த லாபம் 908 மில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், 1.15 பில்லியன் […]

கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், நோக்கியா நிறுவனத்தின் லாபம் நிறுவனத்தின் வளர்ச்சி கணிப்பை விட உயர்வாக பதிவாகியுள்ளது. மேலும், இந்தியா போன்ற நாடுகளில் 5ஜி தொழில்நுட்பம் காலூன்ற தொடங்கி உள்ளதால், 2023 ஆம் ஆண்டிலும் லாபம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டில், நிறுவனத்தின் லாபம் 924.6 மில்லியன் யூரோக்களாக பதிவாகி இருந்தது. மேலும், 2022 ஆம் ஆண்டில், ஒட்டுமொத்த லாபம் 908 மில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், 1.15 பில்லியன் யூரோக்கள் லாபம் பதிவாகி ஆச்சரியம் அளித்துள்ளது. மேலும், நோக்கியாவின் நிகர விற்பனை 24.9 பில்லியனிலிருந்து 26.5 பில்லியன் யூரோக்கள் வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த காலாண்டில், நிகர விற்பனை 16% உயர்ந்து, 7.45 பில்லியன் யூரோக்களாக பதிவாகியுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து 5ஜி தொடர்பாக கையெழுத்தான ஒப்பந்தங்களே இதற்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகின்றது. அதே வேளையில், நோக்கியாவின் முக்கிய போட்டியாளரான எரிக்சன், வளர்ச்சிக் கணிப்பை விட குறைவான லாபத்தை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu